18.5.04

கடவுள்


சிறுவயதில்,

கடவுளைப் பற்றிய

பயமிருந்தது எனக்கு.

ஒரு ஆவணிமாத வெள்ளிக்கிழமையில்

முன்னிரவுக்குப் பிந்தைய பொழுதில்

அரிக்கேன் விளக்குகளின்

மங்கிய வெளிச்சத்தில்

வெட்டுப்பட்ட ஆட்டின்

இரத்தம் பீறிடும் கழுத்தில்

வாய் வைத்திருப்பார்

ஆவேசங்கொண்ட பூசாரி.

பக்கத்துப் பெரிய

பூவரச மரத்துக்குப் பின்னால்

ஒளிந்து கொள்வேன் நான்.

1 கருத்து:

memorabilia சொன்னது…

ஆட்டையும், மாட்டையும் பலியிடு என்று சொன்ன கடவுள் யார்? அவர் எப்பொழுது சொன்னார்? மனிதர்களை வெட்டினால் குய்யோ முறையோ என்று கத்துகிறோம். இந்த வாயில்லாத ஜீவன்களுக்கு, உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத இந்த உயிர்களை வெட்டி நாக்கு ருசி காரணமாக படையில் இட்டு இவர்களே வெளுத்துக் கட்டுகிறார்கள். தங்களை வெட்டும் போது நானும் இது போல உங்களை வெட்டுவேன் என்று அதுவும் நினைக்காது என்று என்ன நிச்சயம்? தனக்கு வெட்டினால் வலிக்கிறதே என்பது போல இவைகளுக்கும் வலிக்கும் என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.

கருத்துரையிடுக